நாங்கள் பேசுபவர்கள் அல்ல..செய்து காட்டுபவர்கள்! முடியுமா என்று கேட்டவர்களுக்கு சரியான சவுக்கடி இது! அதிமுக-வை நேரடியாக விமர்சித்த முதல்வர்!

நாங்கள் பேசுபவர்கள் அல்ல..செய்து காட்டுபவர்கள்! முடியுமா என்று கேட்டவர்களுக்கு சரியான சவுக்கடி இது! அதிமுக-வை நேரடியாக விமர்சித்த முதல்வர்!

இன்று கரூரில் விவசாயிகளுக்கு இலவசம் மின்சார வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இதனையடுத்த திண்டுக்கல்லில் நடக்க இருக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் கரூரில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் கூறியதாவது, மண்ணை காக்கும் விவசாய பெருமக்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது மூலம் என் மனம் குளிர்ந்து உள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி அடுத்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை தற்பொழுது திமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 1989 ஆம் ஆண்டுகளில் உழவர்களுக்கு இலவசம் மின்சாரம் வழங்கும் திட்டத்தை கலைஞர் தொடங்கி வைத்தார். அதனையடுத்து தற்போது திமுக ஆட்சியில் இது செயல்படுத்தி இருப்பது தமிழக அரசின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்.

இலவச மின்சாரம் வழங்கப்பட்டு இருப்பதால் உணவுப் பொருட்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் மற்ற மாநிலங்களை விட நம் மாநிலத்தின் உணவின் விலை குறைவாகவே காணப்படுகிறது. முன்பை விட தற்போது பண புழக்கமும் உயர்ந்துள்ளது. அதேபோல தமிழ்நாட்டின் வாழ்வாதார நிலை ஏற்றும் இறக்கம் இல்லாமல் சீராக உள்ளது.அது மட்டும் இன்றி இந்தியாவில் அதிக மின் உற்பத்தியில் தமிழகம் தான் முதல் மாநிலமாகவும் இருக்கிறது.

அதனை தக்க வைத்துக் கொள்ள அனைத்து மாவட்டங்களிலும் சூரிய மின் சக்தி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பலரும் ஒரு லட்சம் இலவசம் மின் இணைப்பு சாத்தியமா என்று கேள்வி எழுப்பினர். இதனை இவர்கள் செய்து காட்டி முடிப்பார்களா என்றும் விமர்சனம் செய்தனர். ஆனால் ஆறே மாதத்திலேயே ஒரு லட்சம் மின் இணைப்புகள் தற்பொழுது வரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஒன்றை மற்ற அரசுகள் செய்தது கூட கிடையாது.

காலப்போக்கில் இதை செய்கிறோம் ,அதை செய்கிறோம் என சொல்லிவிட்டு செல்வதல்ல இந்த திமுக ஆட்சி, அதனை முறையாக செயல்படுத்துவது தான் இந்த அரசு. இதுவே கடந்த அதிமுக ஆட்சி நடைபெற்ற பத்து ஆண்டுகளில் 2.0 லட்சம் வேளாண் மின் இணைப்புகள் தான் வழங்கப்பட்டது. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்த 15 மாத காலத்திலேயே 1.50 லட்சம் மின் இணைப்புகளை வழங்கி விட்டோம் என்று ஸ்டாலின் பேசினார்.

Leave a Comment