ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 4 ஆண்டுகள் தாமதத்திற்கு ஆளுநர் தான் காரணம்.. இனி கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும்-பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட ஆறு பேரை கைது செய்தனர். அவர்களின் விடுதலைக்காக ஆங்காங்கே பல குரல்கள் ஒலித்தாலும் பயனளிக்காமல் போனது. நான்கு வருடங்களுக்கு முன்பு இவர்கள் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உண்டானது. அவரின் ஒப்புதலை கேட்டு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் தாமதம் கழித்து தான் தற்பொழுது ஒப்புதல் கிடைத்துள்ளது. இது குறித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது,
ராஜிவ் கொலை வழக்கில் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த பிறகும் சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.
ராஜிவ் கொலை வழக்கில் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த பிறகும் சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது!(1/4)
— Dr S RAMADOSS (@drramadoss) November 11, 2022
6 தமிழர்களின் நன்நடத்தை, கல்வித் தகுதி மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், பேரறிவாளன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது.
6 தமிழர்களின் நன்நடத்தை, கல்வித் தகுதி மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், பேரறிவாளன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது!(2/4)
— Dr S RAMADOSS (@drramadoss) November 11, 2022
6 தமிழர்களின் விடுதலைக்கு 09.09.2018-இல் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் தான் அடிப்படை. அமைச்சரவை தீர்மானத்தை அப்போதே ஆளுனர் ஏற்றுக் கொண்டிருந்தால் அப்போதே அவர்கள் விடுதலையாகியிருப்பார்கள். இப்போது 4 ஆண்டுகள் தாமதமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
6 தமிழர்களின் விடுதலைக்கு 09.09.2018-இல் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் தான் அடிப்படை. அமைச்சரவை தீர்மானத்தை அப்போதே ஆளுனர் ஏற்றுக் கொண்டிருந்தால் அப்போதே அவர்கள் விடுதலையாகியிருப்பார்கள். இப்போது 4 ஆண்டுகள் தாமதமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்!(3/4)
— Dr S RAMADOSS (@drramadoss) November 11, 2022
அமைச்சரவையின் முடிவுகள் மீது ஆளுனர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்படாதது தான் பல சிக்கல்களுக்கு காரணம் ஆகும். இந்த நிலையை மாற்ற அமைச்சரவையின் பரிந்துரை, தீர்மானம் ஆகியவற்றின் மீது ஆளுனர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்.
அமைச்சரவையின் முடிவுகள் மீது ஆளுனர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்படாதது தான் பல சிக்கல்களுக்கு காரணம் ஆகும். இந்த நிலையை மாற்ற அமைச்சரவையின் பரிந்துரை, தீர்மானம் ஆகியவற்றின் மீது ஆளுனர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்!(4/4)
— Dr S RAMADOSS (@drramadoss) November 11, 2022
பேரறிவாளன் விடுதலை அடிப்படையாக கொண்டு இவர்களை விடுதலை செய்ததை பாராட்டிய பாமக நிறுவனர்,ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்வதை கண்டித்துள்ளார்.