District News, Breaking News, Chennai, State

தமிழகத்திற்கு விடப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்! வானிலை ஆய்வு மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Photo of author

By Sakthi

தமிழகத்திற்கு விடப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்! வானிலை ஆய்வு மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Sakthi

Button

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்ற நிலையில், ஆங்காங்கே கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் நிரவி வருகிறது. ஆகவே இன்று தமிழகத்தில் கன முதல் மிக கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடகிழக்கு இலங்கை பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில், தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது வட தமிழக கடலோர பகுதி மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அதிக கனமழையும், நாளை முதல் நவம்பர் மாதம் 16ஆம் தேதி வரையில் தமிழகம் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது.

அதோடு நேற்றைய தினம் நிர்வாக காரணங்களுக்காக தமிழகத்திற்கு விடப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையானது வாபஸ் பெறப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உணவுத்துறை அதிகாரி போட்ட ஸ்ட்ரிட் ஆர்டர்!! கொண்டாட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்கள்!

பாபர் ஆசாம் பாகிஸ்தானுக்கே பிரதமர் ஆகலாம்… சுனில் கவாஸ்கர் கமெண்ட்ரி!

Leave a Comment