ரூ1000க்கு விற்பனையாகும் தோசை! உணவு பிரியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவரும் அவரவர்களின் பணிக்காக ஓடிகொண்டுள்ளனர்.அதனால் பெரும்பாலானோர் வீட்டில் சமைப்பதே கிடையாது.உணவகத்தை நம்பி தான் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் நாம் இருக்கும் இடத்தில் இருந்த ஒரு ஆப் மூலம் ஆடர் செய்தால் வீடுதேடி உணவை டெலிவரி செய்யும் வசதியும் வந்துள்ளது.
உணவகத்தில் சென்று ஆடர் செய்யும்பொழுது ஒவ்வொரு உணவிலும் எண்ணற்ற வகைகள் உள்ளது.அந்த வகையில் தோசையில் சாதா தோசை ,மசால் தோசை ,கல்தோசை ,பொடி தோசை ,நெய் தோசை, கறிவேப்பிலை தோசை ,கொத்தமல்லி தோசை ,புதினா தோசை என்று தோசையில் எண்ணற்ற வகைகள் உள்ளது.
இந்நிலையில் தோசையில் தங்க தோசை என்று புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தில் துமகூரு பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் இந்த தோசை தயார் செய்யப்பட்டுள்ளது.இந்த தோசை உணவு பிரியர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஒரு தங்க தோசை ரூ1000 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.முதலில் மசால் தோசை தயார் செய்து அவை சூடாக இருக்கும் போதே அந்த தோசையின் மீது 24காரட் தங்கம் முலாம் பூசப்பட்ட மெல்லிய பேப்பர் வைக்கப்படுகின்றது. நாளொன்றுக்கு சுமார் 20தோசை விற்பனை செய்யப்படும் என அந்த உணவகம் தெரிவித்துள்ளது.
இந்த தோசையின் வைக்கப்படும் தங்கமூலாம் பூசப்பட்ட தாள்கள் குஜராத்தில் இருந்து வரவழைக்கப்படுகின்றது.மேலும் இந்த தோசைக்கு அந்த உணவகம் கோல்டன் பாயில் எடிபல் மசால் தோசை என பெயர் வைத்துள்ளனர்.