இன்று கனமழை.. நாளை மிதமழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

0
242

தமிழகம் முழுவதும் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இதனால், இன்று தமிழகத்தில் கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ரெட் அலார்ட் திரும்ப பெறப்பட்ட நிலையில், கன மழை அடுத்த இரண்டு நாட்களுக்கு படிப்படியாக குறையு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை மற்றும் நாளை மறுநாள் மிதமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது. மேலும், வருகின்ற 16ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Previous articleபெற்ற மகளை கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாடிய தந்தை… இறுதி நொடிகளை வீடியோவாக பதிவு செய்த அவலம்..!
Next articleகொட்டி தீர்க்கும் கனமழை: 2-வது நாளாக தத்தளிக்கும் மக்கள்! மழை நீரில் மிதக்கும் சிதம்பரம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here