பொல்லார்டுக்கு டாட்டா காட்டிய மும்பை இந்தியன்ஸ்… ஏலத்தில் எடுக்கப் போவது யார்?

Photo of author

By Vinoth

பொல்லார்டுக்கு டாட்டா காட்டிய மும்பை இந்தியன்ஸ்… ஏலத்தில் எடுக்கப் போவது யார்?

மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கைரன் பொல்லார்டு அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை ஐபிஎல் தொடர்களிலேயே அதிகமான முறை கோப்பையை வென்ற அணி மும்பை இந்தியன்ஸ். ரோஹித் ஷர்மா தலைமையில் 5 முறை கோப்பையை வென்றுள்ளது. ஆனால் ஐபிஎல் 2022 இல் மும்பை இந்தியன்ஸ் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடந்த சீசனில் அந்த அணி கடைசி இடத்தில் நிறைவு செய்தது.  மும்பை இந்தியன்ஸ் அணி தேவையற்ற வீரர்களுக்காக அதிக பணம் செலவழித்ததாக விமர்சகர்கள் கூறினர்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 12 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வருபவர் கைரன் பொல்லார்ட். பல போட்டிகளில் (இறுதிப் போட்டிகள் உள்பட) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெற வைத்துள்ளார். ரோஹித் ஷர்மா இல்லாத சில போட்டிகளில் அந்த அணிக்கு கேப்டனாகவும் வழிநடத்தியுள்ளார்.

ஆனால் கடந்த சில சீசன்களாக அவர் சிறப்பாக விளையாடவில்லை. இருந்தும் கடந்த முறை 8 கோடி ரூபாய் கொடுத்து அவரை மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைத்தது. ஆனால் இம்முறை அவரை அணியில் இருந்து விடுவித்துள்ளது. அடுத்த மாதம் நடக்கவுள்ள மினி ஏலத்தில் பொல்லார்டு பங்கேற்க உள்ள நிலையில் அவரை எடுக்க மற்ற அணிகளுக்குள் பெரியளவில் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.