பிரியாணி சாப்பிட்டதால் நேர்ந்த சோகம்: 150 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!!

0
275

பிரியாணி சாப்பிட்டதால் நேர்ந்த சோகம்: 150 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!!

செங்கல்பட்டு மாவட்டத்தில்,பிரியாணி சாப்பிட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 150 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதியில் நேற்றிரவு மாணவர்களுக்கு உணவாக பிரியாணி வழங்கப்பட்டுள்ளது.
இந்த பிரியாணியை சாப்பிட்டால் மாணவர்களுக்கு திடீரென வாந்தி,மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் உடனடியாக பிரியாணி சாப்பிட்ட 150 க்கும் மேற்பட்ட மாணவர்களை அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதில் 6 மாணவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து கேளம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு உள்ளனர்.

அண்மையில் நாகப்பட்டினம் செவிலியர் விடுதியில் சாம்பார் சாதம் சாப்பிட்டதால், 50க்கும் மேற்பட்ட
மாணவிகளுக்கு உணவு உபாதை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleபயணிகள் அவதி! திடீரென தாமதம் ஆன ரயில்கள்!
Next articleசாகச நிகழ்ச்சியில் நேருக்கு நேர் மோதிகொண்ட விமானங்கள்! 6 போ் பலி!