குழந்தைகளுக்கான முக்கிய உரிமைகள் என்னென்ன தெரியுமா! சட்டம் சொல்லும் பாடம்!
இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் உரிமைகளை அறிவதில்லை.அந்த உரிமைகள் என்னென்ன அவற்றை பற்றியும் இந்த பதிவின் மூலம் காணலாம்.
இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் நான்கு வித அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும் குழந்தைகளுக்கான உரிமைகள் ஐக்கிய நாடுகள் சபையினால் வரையறுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பல்வேறு காரணங்களால் சமூகக் கட்டமைப்புகளாலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உரிமைகள் மறுக்கப்படுகின்றது.
குழந்தைகள் உரிமை என்றால் என்ன:
குழந்தைகளின் உரிமைகள் மற்றும் நமது கடமைகள் பற்றி அறிந்து செயல்படுவதன் மூலம் குழந்தைகளின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் நடவடிக்கைகளாகும்.18 வயதிற்குட்பட்டவர்கள் அனைவரும் குழந்தைகள் தான்.குழந்தைகளின் பாதுகாப்பு,கல்வி ,உணவு ,சுகாதாரம் போன்றவைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.குழந்தைகளின் வாழ்வுரிமை என்பது அவர்களின் கல்வி உரிமை தான்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டம்-2009:
2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி அன்று பாராளுமன்றத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டது.மேலும் 27 ஆகஸ்ட் 2009 இல் மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. 6 வயது முதல் 14வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்குவதே இந்த சட்டத்தின் நோக்கம்.
குழந்தைகள் உரிமைகளை பாதுகாக்கும் சட்டங்கள்:
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையச் சட்டம்-2005.
குழந்தை திருமண தடுப்பு சட்டம்-2006.
குழந்தைகளை குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம்-2012.
குழந்தைகள் நீதிச்சட்டம் பாதுகாப்பு மற்றும் கவனிப்பு-2015.
குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம்-2016.
மாற்று திறனாளிகள் உரிமைச்சட்டம்-2016:
மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி அவர்களின் நலன் மற்றும் அவர்களின் உரிமைக்காக இந்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது.மாற்றுத்திறனாளிகளின் உரிமையும் நலம்,சம உரிமை ,வேலை வாய்ப்பு போன்றவைகள் தான்.இந்தியாவில் மொத்தம் 7கோடிக்கும் அதிகமாக மாற்றுத்திறனாளிகள் இருகின்றனர்.
அவர்களை ஒருபொழுதும் கருணையின் அடிப்படையில் பார்க்க கூடாது அவர்களுக்கு வழங்கப்படும் உரிமையின் அடிப்படையில் மட்டுமே பார்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.