கால்பந்து விளையாட்டு வீராங்கனையை கொன்றுவிட்டு திமுக அநீதி இழைக்கிறது – ரூ.1 கோடி வழங்க எதிர்கட்சி தலைவர் கோரிக்கை!

0
155
DMK commits injustice after killing football player - Opposition leader demands Rs 1 crore!
DMK commits injustice after killing football player - Opposition leader demands Rs 1 crore!

கால்பந்து விளையாட்டு வீராங்கனையை கொன்றுவிட்டு திமுக அநீதி இழைக்கிறது – ரூ.1 கோடி வழங்க எதிர்கட்சி தலைவர் கோரிக்கை!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் தான் பிரியா. இவர் கால்பந்து விளையாட்டு வீராங்கனை,மாவட்டம் மாநிலம் என அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி உள்ளார். இவருக்கு சமீபத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று காலில் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் பெரம்பூர் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அங்கு பிரியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூட்டு ஜவ்வில் பிரச்சனை உள்ளது என கூறியுள்ளனர்.

அதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.மேற்கொண்டு பிரியாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.அறுவை சிகிச்சை செய்தும் அவரது கால் வலி குறையவில்லை. மேலும் அவரது முட்டியானது பெருமளவில் வீக்கம் அடைந்து விட்டது. இதனையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேற்கொண்ட பிரியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவரது காலில் ரத்த ஓட்டம் நடைபெறாமல் தடையாகி உள்ளது எனக் கூறியுள்ளனர்.

 மேலும் இந்த ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் பிரியாவின் தோல் மற்றும் அதனில் உள்ள திசுக்கள் அழுக ஆரம்பித்து விட்டதாக கூறியுள்ளனர். எனவே இவருடைய காலை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். மேற்கொண்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அவரது காலையும் எடுத்துள்ளனர்.

பலர் விளையாட்டு வீராங்கனை காலை அகற்றியது குறித்து சுகாதாரத்துறை அமைச்சரிடம் பல கேள்விகளு எழுப்பி வந்தனர்.குறிப்பாக மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்துள்ளதாகவும் கூறிவந்தனர்.மருத்துவர்களை விசாரணை செய்ய தனிப்படையான குழு அமைக்கப்பட்டது.

இதில் மருத்துவர்கள் பிரியாவிற்கு தவறுதாலாக சிகிச்சை அளித்துள்ள உண்மையும் வெளிவந்தது.இதனையடுத்து அந்த மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்தும்,பணி பணியிடை மாற்றம் செய்தும் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிரியா இன்று காலை உயிரிழந்தார். இவருக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தெரிவித்துள்ளது.

மேற்கொண்டு பிரியா உயிரிழப்பிற்கு பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில்,

அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கணை பிரியா மரணத்திற்கு காரணமாக இந்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன், இழைக்கப்பட்ட அநீதிக்கு பொறுப்பேற்று இவ்வரசு பிரியா குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

கால்பந்து வீராங்கணை பிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக விளையாட்டு வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்பொழுது நடைபெற்று வரும் திமுக அரசால் தான் நல்ல வீராங்கனையை இழந்துவிட்டதாகவும்,அவருக்கு 1 கோடி இழப்பீடு தர வேண்டும் எனவும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார்.

Previous articleஎய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைக்கு கொடுக்கப்பட்ட உணவில் இருந்த  ஆபத்து! பெற்றோர் கவனித்ததால் உயிர்சேதம் தவிர்ப்பு! 
Next articleமீண்டும் இந்திய அணியில் தோனியா?… ரசிகர்களைக் குழப்பிய செய்தி!