மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! கவலைகள் தீரும் நாளாக இருக்கும்!

Photo of author

By CineDesk

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! கவலைகள் தீரும் நாளாக இருக்கும்!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கவலைகள் தீரும் நாளாக இருக்கும். கடந்த இரண்டு நாட்களாகவே சிறு சிறு கவலைகளுடன் காணப்பட்டிருந்திருப்பீர்கள். ஆனால் இன்றைக்கு கவலைகள் நீங்கி சந்தோஷத்துடன் காணப்படுவீர்.

இன்றைக்கு சந்திரன் சாயந்திரம் வரைக்கும் தன வாக்கு குடும்பஸ்தானத்தில் இருக்கிறார். அதற்கு அப்புறம் சகாய ஸ்தானத்திற்கு வரப் போகிறார். உங்களுடைய முயற்சிகள் எல்லாம் சாயந்திரதுக்கு அப்புறம் நல்லபடியாக நடக்கும். குடும்ப உறவு பலமாக இருக்கும். கணவன் மனைவியிடையே அன்யூனியம் கூடும். வாழ்க்கை துணை உறவினர்கள் மூலம் சில நன்மைகளை பெறுவீர்கள்.

பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருப்பதால் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த சலுகைகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் அற்புதமாகச் செல்லும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் புதுமனை புது வீடு வாங்கி மகிழ்வார்கள்.

கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வருமான வாய்ப்பு உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு கண்டிப்பாக சந்தோஷமான செய்தி வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் மனதில் இருந்த கவலை நீங்கி உற்சாகமாக பணிபுரிவார்கள். உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக அமையும்.

மாணவ மாணவிகள் கல்வியில் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் மருத்துவச் செலவு குறைந்து உடல் ஆரோக்கியம் சரியாகி நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்கள் சந்தோஷ செய்தி கேட்டு மனம் மகிழ்ந்து போவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடையை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வாருங்கள் இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.