பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
கடந்த வாரம் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது அதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வந்தது.அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்து வருகின்றது.அதனால் கடந்த வாரம் அதீத கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்த நாட்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தனர்.
இநிலையில் 122 ஆண்டுகளில் இல்லாதா அளவில் ஆறு மணி நேரத்தில் 44 செ.மீ மழை கொட்டியது.அதனால் சீர்காழி முழுவதும் வெள்ளக்காடாக தீவு போல் காட்சி அளித்து வருகின்றது.மேலும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மழை நீர் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
அதன் காரணமாக சீர்காழியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.அதனையடுத்து மயிலாடுதுறை ,குற்றாலம் போன்ற பகுதிகளில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
தொடர் கனமழையின் காரணமாக இவ்வாறு அடிகடி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகின்றது.தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் பாடங்கள் முழுமை பெறாமல் இருகின்றது.மாணவர்கள் எவ்வாறு தேர்வு எழுதுவார்கள் என ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.