கும்பம் – இன்றைய ராசிபலன்!! உற்சாகம் அதிகரிக்கும் நாள்!
கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும் நாள். ஏனென்றால் கலஸ்தரஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் ஏழாம் இடம் புனிதம் ஆகிறது. ஆகையால் உங்கள் வாழ்க்கையும் சிறப்பாக அமையும். குடும்ப உறவு பலப்படும். கணவன் மனைவியிடையே ஒரு சிறப்பான அன்போடு காணப்படுவீர். வாழ்க்கைத் துணை உறவினர்கள் தொலைபேசி மூலம் உங்களுக்கு நல்ல தகவல்களை தருவார்கள்.
வருமானம் நீங்கள் எதிர் பார்த்தபடி வந்து சேரலாம் சிலருக்கு இரட்டிப்பாகலாம். உத்தியோகத்தில் உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாகவும் சுபிட்சகரமாகவும் செல்லும். சிலருக்கு புதிதாக தொழில் தொடங்கும் வாய்ப்புகள் வந்து சேரும்.
அரசியலில் இருக்கும் அன்பர்கள் அநேகமான முன்னேற்றங்களை காண்பார்கள். துரை சேர்ந்த அன்பர்களுக்கு பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனை அன்பை பெற்று மகிழ்வதோடு மட்டுமல்லாமல் சந்தோஷ வானில் சிறகடித்து பரப்பார்கள்.
உடல் ஆரோக்கியம் வெகு சிறப்பாக அமையும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆற்றல் பெற்று ஆனந்தமாக காண்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்கள் சந்தோஷ செய்தி கேட்பார்கள் அதன் மூலம் அவர்களது வாழ்க்கை தரம் உயரும்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.