தமிழக அரசின் இலவச காசி பயணம்! யாரெல்லாம் இதில் கலந்துக்கொள்ளலாம்? 

Photo of author

By Rupa

தமிழக அரசின் இலவச காசி பயணம்! யாரெல்லாம் இதில் கலந்து கொள்ளலாம்?

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற தளங்களை காண்பதற்கு என்று ஆன்மீக பயணம் திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் வைணவ திருக்கோவில்களை மக்கள் கண்டு களித்து வந்தனர். அந்தந்த மாதத்திற்கு ஏற்ப பிரசித்தி பெற்ற கோவில்களுக்கும் சென்று வந்தனர்.அவ்வாறு பயணம் செய்யும் பொழுது உணவு எனத்தொடங்கி அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் அறநிலையத்துறை ஏற்பாடு செய்தது.

அதனையடுத்து தற்பொழுது தமிழகத்தில் ஆன்மீக பக்தி உடைய மூத்தோரை இலவசமாக இந்து சமய அறநிலைத்துறை சார்பாக ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளனர். இது குறித்து தமிழக அரசு முன்பே அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் தற்பொழுது மண்டல வாரியாக 10 பேரை தேர்வு செய்து அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர்.

குறிப்பாக காசிக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு வயதுவரம்பு 60 முதல் 70 வயது உடையவராக இருக்க வேண்டும். மேலும் அவர்களின் ஆண்டு வருமானம் ஆனது 72 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருக்க வேண்டும். இவ்வாறான விதிமுறைகளுக்கு  கீழ் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு அழைத்து செல்லப்படும் என்று கூறியுள்ளனர். இதுபோல 200 பேரை அழைத்து செல்ல தமிழக அரசு முடிவு செய்துள்ளது.