மேட்டூர் அணையில் விஷமா? கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்!!

0
174
Tamil Nadu government's free trip to Kashi! Who can participate?
Tamil Nadu government's free trip to Kashi! Who can participate?

மேட்டூர் அணையில் விஷமா? கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்!!

2016 ஆம் ஆண்டு மேட்டூர் அணையில் மீன் பிடிக்கலாம் என்று உரிமத்தை அங்குள்ள மீனவர்கள் வாங்கினர். அன்றிலிருந்து தற்பொழுது வரை மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். அதேபோல மீன்வளத் துறை சார்பில் வருடம் தோறும் 45 லட்சம் மீன் குஞ்சுகள் மேட்டூர் அணையில் விடப்படுகிறது. அவ்வாறு விடப்படும் மீன்களை உரிமம் பெற்ற மீனவர்களை கொண்டு பிடிப்பது வழக்கம்.

பின்பு அதனை மேட்டூர் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் விற்பனை செய்வர். அதேபோல மேட்டூரில் இருந்து வெளியேற்றப்படும் நீரானது செக்கானூர் தடுப்பணைக்கு செல்லும். பின்பு தடுக்கப்படும் நீரை கொண்டு மின் உற்பத்தி நடைபெறும். மேட்டூர் அணைக்கும் செக்கானூர் பகுதிக்கும் இடையே நாட்டாமங்கலம் காவேரி கிராஸ் போன்ற கிராமங்கள் உள்ளது.

இந்த கிராமங்களில் உள்ள ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் உயிரிழந்து காணப்படுகின்றது.மேலும் அங்கு சுற்றியுள்ள கிராமங்கள் இந்த நீரை தான் உபயோகிக்க வேண்டி உள்ளது.எந்த காரணத்தினால் இந்த மீன்கள் உயிரிழந்தது என பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.அதுமட்டுமின்றி டன் கணக்கில் இறந்து உள்ள நீரை அங்குள்ள கிராம மக்கள் உபயோகிப்பதால் அவர்களுக்கு உடல் நிலையில் ஏதேனும் உபாதைகள் உண்டாக நேரிடலாம்.

அதனால் சுகாதாரமற்ற நீரை பயன்படுத்த முடியாது எனக்கூறி அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அங்குள்ள நீரை எடுத்து சோதனை செய்து இதற்கு உண்டான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.

Previous articleஉடல் நல குறைவால் இறந்த மகன்.. சோகத்தில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு..!
Next articleமக்களே இதோ உங்களுக்காக! ஓட்டு போடும் முறை தற்போது வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்!