கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!
கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவுகள் சுமாராகவே இருக்கும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நீங்கள் நல்ல பாதையை அடையலாம். கணவன் மனைவியிடையே சிறு சிறு அபிப்பிராய வேதங்கள் எழலாம் என்பதால் அனுசரிச்சு போவது நல்லது.
வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உபயோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில பிரச்சனைகள் ஏழலாம் என்பதால் கூட்டாளிகளை அனுசரிச்சு செல்வது அவசியம்.
அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம்.
உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் காரியங்கள் இழுபரி ஆகிறது என்ற கவலையுடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.
மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் கவனம் செலுத்துவது அவசியம். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனம் மேற்கொள்வது நல்லது.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.