சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நடந்த முறைகேடு! இருவர் அதிரடி பணி நீக்கம்!

0
215
The malpractice in Salem Periyar University! Two active dismissal!
The malpractice in Salem Periyar University! Two active dismissal!

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நடந்த முறைகேடு! இருவர் அதிரடி பணி நீக்கம்!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட பருவத்தேர்வில் முதுகலை வரலாறு மாணவர்களுக்கு கேட்கப்பட்ட கேள்வியில் தமிழ்நாட்டில் தாழ்ந்த சாதி யார் என்று கேள்வி இடம்பெற்றது.அதனால் அவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு உரிய அங்கீகாரம் இல்லாத தொழில்நுட்ப படிப்புகள் நடத்தபட்டது.அதனையடுத்து முன்கல்வித்தகுதி இல்லாத வெளிமாநில மாணவர்களை சேர்த்துள்ளனர்.

அதுமட்டுமின்றி படிப்பு முடிப்பதற்கான சான்றிதழ் வழங்கியது என பல்வேறு முறைகேடு நடப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.அதனையடுத்து குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.அந்த விசாரணையில் குழு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கடந்த மாதம் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

அந்த ஒப்புதலின் படி பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளராக இருந்த ராமன் என்பவர்  கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யபட்டார்.இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராமனை நிரந்தரமாக பணிநீக்கம் செய்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவிட்டார்.அதனையடுத்து தொகுப்பூதிய பணியாளரான அன்பரசியும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleவிரைவாக காலை உணவு செய்ய வேண்டுமா? உங்களுக்காக அசத்தலான ரெசிபி இதோ..!
Next articleவேலை நிறுத்த போராட்டம் வாபஸ்.. இன்று வங்கிகள் வழக்கம் போல செயல்படும்..!