மக்களிடம் 110 கோடி அபேஸ்!! காவல்துறைக்கே சவால் விட்ட பலே திருடன்!!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சேலக்காரவை சஜீவ் கருண் என்பவர் பொள்ளாச்சி கோட்டம்பட்டி பகுதியில் தனியார் நிறுவனத்தை ஒன்று தொடங்கினார்.இவர் தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்யும் ஆலையை நடத்தி வருவதாகவும்,தனது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு லாபத்தில் பங்கு தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இவரின் ஆசை வார்த்தையை நம்பி சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த பரமசிவன் என்பவர் அந்நிறுவனத்தில் 96 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார்.
சில நாட்களாகியும் லாபத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என்றும் முதலீடு செய்த பணத்தையும் திருப்பி தரவில்லை என்றும் பரமேஸ்வரன் கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.
புகாரின் பெயரில் சஜ்வ் கருண் மீது நடத்திய விசாரணையில் பல திடுக்களும் தகவல்கள் வெளியாகியுள்ளது.அதாவது கோவை மாவட்டத்தில் சுமார் 300 பேரிடமிருந்து ரூபாய் 110 கோடி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.இதனால் இந்த திருடனை பிடிக்க காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டது.
பின்பு கேரள மாநிலம் திருச்சூரில் பதுங்கி இருந்த சஜீவ் கருணை காவல்துறையினர் நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் அந்நபரிடம் தீவிர விசாரணையை நடத்திய கோவை குற்றப்பிரிவு காவல் துறையினர்,இந்த நபர் மீது கேரளாவில் 85 மோசடி வழக்குகள் பதிவு ஆகி உள்ளது கண்டுபிடித்தனர்.மேலும் மோசடி செய்த பணத்தில் கேரளாவில் பங்களா வீடு, எஸ்டேட், சொகுசு கார்கள் என வாங்கி ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்துள்ளதும் மோசடி பணத்தில் பல குறும்படங்கள் மற்றும் பல மாடல்களுடன் உல்லாச வாழ்க்கையும் வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமின்றி இந்த கொள்ளைக்காரன் என் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்தாலும் நான் மீண்டும் வெளியே வந்து மோசடியில் ஈடுபட்டு பல கோடிகள் சம்பாதிப்பேன் என்று காவல்துறைக்கு சவால் விடுத்துள்ளார்.