மங்களூர் குண்டு வெடிப்புக்கும் கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? காவல்துறையினர் அதிரடி விசாரணை!

0
184

மங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்தை நடத்திய முகமது ஷாரிக் கோவை தனியார் விடுதியில் கௌரி அருண்குமார் என்ற பெயரில் தங்கி இருந்ததும், போலியான முகவரியை வழங்கி இருப்பதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது அது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றன. இந்த வழக்கின் குற்றவாளியாக கருதப்படும் முகமது சாரிக் தமிழகத்தில் கோவை, நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்கள் தங்கி அதன் பிறகு மங்களூருக்கு சென்றது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இந்த பகுதிகளில் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றன. தமிழகத்தில் தங்கி இருந்த பகுதிகளில் யாருடன் சந்தித்து உரையாடினார் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிலும் குறிப்பாக கோவை பகுதியில் 3 நாட்கள் காந்திபுரம் பகுதியில் இருக்கின்ற எம் எம் வி தங்கும் விடுதியில் முகமது ஷாரிக் தங்கியிருந்தது தெரிய வந்திருக்கிறது. அப்பொழுது தன்னுடைய அடையாளத்தை மாற்றிக் கொண்டு கௌரி அருண்குமார் என்ற பெயரில் போலியான கர்நாடக மாநில முகவரியை வழங்கி அவர் அந்த விடுதியில் தங்கி இருந்தார் என்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

அதோடு காந்திபுரத்தில் தங்கியிருந்த விடுதியில் அருகில் இருந்த அறையில் தங்கி இருந்த தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்தரிடம் பழகி அவருடைய ஆதார் ஆவணத்தை வைத்து சிம்கார்டு வாங்கி இருப்பதும், ஆனால் அந்த சிம் கார்டில் இருந்து கோவை உட்பட எந்த பகுதிக்கும் பேசவில்லை என்பதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

ஆகவே இந்த சிம்கார்டு மூலமாக வாட்ஸ் அப் காலை பயன்படுத்தி மற்ற நபர்களுடன் பேசியிருக்கலாம் என்று சந்தேகப்படும் கோவை காவல்துறையினர் whatsapp கால் விவரங்களை சேகரிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

அல்கொய்தா அமைப்பின் சித்தாந்தங்களால் அகமது சாருக் கவரப்பட்டு, அதன் ஆதரவாளராக இருந்த நிலையில், கோவையில் இது போன்ற அடிப்படை வாத அமைப்புகளின் ஆதரவாளர்களாக இருக்கும் நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்கள் தொடர்பான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

அதோடு 2 குண்டு வெடிப்பு சம்பவங்களையும் வெளியிலிருந்து யாராவது வழிநடத்தி இருக்கிறார்களா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Previous articleஅங்கன்வாடி குழந்தைகளுக்கு அரசு வெளியிட்ட புதிய திட்டம்! ஒவ்வொரு வயதினருக்கும் குறிப்பிட்ட பொருட்கள் வழங்கப்படும்! 
Next article19 ரயில்கள் திடீர் ரத்து! பயணிகள் அவதி!