மீண்டும் பான்கார்டு மற்றும் ஆதார் எண் சேர்க்க ஓர் வாய்ப்பு! அதற்கான கடைசி தேதி வெளியீடு!

மீண்டும் பான்கார்டு மற்றும் ஆதார் எண் சேர்க்க ஓர் வாய்ப்பு! அதற்கான கடைசி தேதி வெளியீடு!

வருமான வரித்துறை கடந்த மார்ச் 31,2022 க்குள் பான் கார்டு அட்டைதாரர்கள் ஆதார் கார்டுடன் இணைக்க வில்லை என்றால் ரூ 1000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.அதனையடுத்து கால வரம்பு நீட்டித்து வழங்கப்பட்டது.

ஜூலை 1 ,2017 ஆம் ஆண்டு பான் கார்டு வழங்கப்பட்டு ஆதார் எண்னை பெற தகுதி பெற்றவர்கள் 31 மார்ச் 2022 அன்று அல்லது அதற்கு முன்பாகவே பரிந்துரை செய்யப்பட அதிகாரியிடம் ஆதார் குறித்து தெரிவிக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்தது.

மேலும் கொடுக்கப்பட்ட காலத்திற்குள் பான்கார்டுடன் ஆதார் எண்னை இணைக்க வேண்டும்.இல்லையெனில் பான்கார்டு செயலிழந்து விடும்.பான் கார்டு தேவைப்படும் இடங்கள் அனைத்திலும் பான் கார்டு உபயோகம் செய்ய முடியாது.அதன் பிறகு அதிகாரிகளிடம் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும்.

 

அதன்பிறகு மீண்டும் பான் எண் செயல்படுத்த முடியும்.என தெரிவித்துள்ளனர்.மேலும் இரண்டு எண்ணையும் இணைக்க கால அவகாசமாக 31 மார்ச் 2023 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment