மின்வாரியம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இதனை செய்தால் மட்டுமே இனி மின்கட்டணம் செலுத்த முடியும்!
தமிழகத்தில் மொத்தம் சுமார் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் இருக்கின்றது.தற்போதுள்ள நடைமுறையின் படி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்த மின் கட்டணம் செலுத்தும் முறையானது தற்போது மிக எளிமை படுத்தப்பட்டுள்ளது.அதற்காக மின்வாரிய இணையதளம்,மின்வாரிய செயலி ,கூகுள் பே ,போன் பே போன்ற செயலிகள் மூலமாக மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.மேலும் இது குறித்து அனைவருக்கும் மின் இணைப்பு வாங்க பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கு மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.
நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஆதார் அட்டையின் நகலை கொண்டு சென்று மின் கட்டணம் செலுத்தும் பொழுது ஆதார் நகலை கொடுத்து ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளை வைத்திருப்பவர்கள் அனைத்திற்கும் ஒரே ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம்.வாடகை வீட்டில் இருப்பவர்கள் அந்த வீட்டில் இருக்கும் மின் இணைப்புடனே ஆதார் எண்ணை இணைக்கலாம்.
குறிப்பாக ஆதார் எண்ணை இணைத்துவிட்டால் 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.பலரும் இதனை அலட்சியமாக எடுத்துக்கொள்வதால் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின் கட்டணம் செலுத்த முடியும் என மின்வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.செயலிகள் மூலம் மின் கட்டணம் செலுத்துபவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகின்றது.