மக்களே எச்சரிக்கை.. உலககோப்பை என்ற பெயரில் 50 ஜிபி இலவச டேட்டா! சைபர்கிரைம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
சமீப காலமாக மக்களின் செல் போன் எண்ணிற்கு கடன் தருகிறோம் என்று குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். அவ்வாறு அவர்கள் அனுப்பும் லிங்கை கிளிக் செய்தால் நமது செல்போனில் உள்ள அனைத்து டேட்டாக்களையும் திருடி விடுகின்றனர். இவ்வாறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். மேலும் உங்கள் செல்போன் எண்ணிற்கு வரும் இப்படிப்பட்ட லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று அவ்வபோது காவல் துறையினர் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ஒவ்வொரு பண்டிகை காலம் வரும் பொழுதும் டி-மார்ட் மற்றும் இதர தனியார் நிறுவனங்கள் சலுகை தருவது போல முகப்பு வைத்து லிங்க் அனுப்புகின்றனர். இந்த லிங்கை இருவது பேருக்கு பகிர்ந்தால் = உங்களுக்கு அந்த சலுகை கிடைக்கும் என்று மக்களை நம்ப வைக்கின்றனர். ஆனால் அவ்வாறான சலுகைகள் ஏதும் அந்நிறுவனங்கள் வழங்கவில்லை.
இது அனைத்தும் டேட்டாக்களை திருடுவதற்காக அனுப்பப்படும் பொய்யான செயலி. அதேபோல தற்பொழுது உலக கோப்பை கால்பந்து போட்டியை முன்வைத்து, இலவச டேட்டா கொடுப்பதாக அனைவருக்கும் ஒரு லிங்க் ஷேர் செய்யப்பட்டது. இரு தினங்களாக இது குறித்த லிங்க் ஆனது அனைவரின் செல்போன் எண்ணிற்கும் அதிக அளவில் அனுப்பிவந்தனர். இவ்வாறு 50 ஜிபி டேட்டா கொடுப்பதாக கூறிவரும் லிங்க் பொய் என்று சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அந்த லிங்கை யாருக்கும் பகிர வேண்டாம் என்று கூறியுள்ளனர்.