மீனம்-இன்றைய ராசிபலன்! புத்துணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

Photo of author

By CineDesk

மீனம்-இன்றைய ராசிபலன்! புத்துணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சி அதிகரிக்கும் நாள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்குவதால் எல்லா வேலைகளையும் தைரியத்துடன் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள்.

கணவன் மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை காணப்படும். நிதி அதி அற்புதமாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் பக்க பலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் கோரிக்கைகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். கொடுக்கல் வாங்கல்கள் அருமையான பாதையில் செல்வதால் புதிய முதலீடுகளை துணிந்து செய்து வெற்றி பெறுவீர்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் கொடி கட்டி பரப்பார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகள் முன்னேற்ற பாதையை அடைவார்கள். கலைத் துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.