மேஷம் ராசி – இன்றைய ராசிபலன் !! எடுத்த காரியங்கள் வெற்றி அடையும் நாள்!

0
232
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன் !! எடுத்த காரியங்கள் வெற்றி அடையும் நாள்!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எடுத்த காரியங்கள் வெற்றி அடையும் நாள். பாக்யஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் எடுக்கும் வேலைகள் அனைத்தும் வெற்றி பெரும்.

குடும்ப உறவு அருமையாக உள்ளது. கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் மூலம் சில நன்மைகள் நடைபெறும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக அமையும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதில் இருந்து வந்த இடையூறுகள் விலகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் தந்தை வழி உறவுகள் மூலம் நன்மைகள் கிடைக்க பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்த மந்த நிலை அகழும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷ செய்தி உறுதியாக வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீ கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleவருங்கால தமிழகமே என அன்புமணியை பாராட்டிய அமைச்சர் பொன்முடி! 
Next articleரிஷிபம் ராசி – இன்றைய ராசிபலன் !! சற்று  அமைதி தேவைப்படும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here