விருச்சிகம் – இன்றைய ராசிபலன் !! சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!

0
204
Scorpio – Today's Horoscope!! You have a busy day!
Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சிகம் – இன்றைய ராசிபலன் !! சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் தன வரவு தாராளமாக வந்து சேரும். கொடுத்த வாக்குகளை அருமையாக காப்பாற்றி மகிழ்வீர்கள்.

குடும்ப உறுப்பினர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். குடும்ப உறவு சிறப்பாக இருக்கிறது. கணவன் மனைவியுடைய அதி அற்புதமான அன்யூனியம் நிகழும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர் பார்த்திருக்கும் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் கேட்ட உதவிகள் கண்டிப்பாக இன்றைய தினம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் புதிய மனை புதிய வீடு வாங்கி மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவன் வீட்டாரின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை கண்டிப்பாக கிடைக்கும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் ரசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷ செய்தி கிடைக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து ஹய்க்ரீவரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.

Previous articleரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் பொருட்கள்! தினந்தோறும் சமையலில் பயன்படுத்துவது தான்!
Next articleஅமைச்சராகிறார் உதயநிதி.. அப்பா சொன்னால் சரி தான்! கொண்டாட்டத்தில் நிர்வாகிகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here