ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழப்பங்கள் குறையும் நாள்!!

0
172
Taurus – Today's Horoscope!! A day to act in peace!
Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழப்பங்கள் குறையும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள். இன்று உங்கள் ராசியில் இருந்து சந்திராஷ்டமம் போனதால் சந்தோஷம் உங்களுக்கு வந்து சேரும்.

குடும்ப உறவில் சந்தோஷம் உண்டாகும். கணவன் மனைவி இடையே சந்தோஷமான சூழ்நிலை கண்டிப்பாக உருவாகும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த வேலைச் சுமை குறையும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக அமையும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் மனக்குழப்பம் விலகி உற்சாகமாக செயல்படுவார்கள். கலைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்ப அச்சங்கள் தெளியும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் கண்டிப்பாக வெற்றி அடைவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்த மந்த நிலை அகழும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதைக் கண்டு மணமகிழ்ந்து போவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடைய அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!!
Next articleமிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! உஷாராக இருக்க வேண்டிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here