விருச்சகம் – இன்றைய ராசிபலன்!! விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள்!!

0
213
Scorpio – Today's Horoscope!! You have a busy day!
Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சகம் – இன்றைய ராசிபலன்!! விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள்!!

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய்  பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விடாமுயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள். நிதி சிறப்பாக உள்ளது. கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து மோதல் விலகுவதால் சந்தோஷமாக திகழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு அதிகரிக்கும்.

 

உத்தியோகத்தில் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் எடுத்த காரியங்களை திறம்பட செய்து முடித்து மேல் அதிகாரிகளை கவர்வதோடு மட்டுமல்லாமல் அதிகப்படியான சலுகைகளையும் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல்கள் மிகச்சிறப்பான பாதையில் செல்லும்.

 

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் தன்னம்பிக்கையோடு செயல்படுவார்கள்.

 

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும். அரசியல்வாதிகள் மேடைப் பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் கண்டிப்பாக கிடைக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் அதி அற்புதமான நாளாக உங்களுக்கு அமையும்.

Previous articleதேனின் மகத்துவம்! உடலில் உள்ள இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!
Next articleதனுசு – இன்றைய ராசிபலன்! நிதி கிட்டும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here