அரையாண்டு தேர்வில் புதிய மாற்றம்! மாணவர்களின் கவனத்திற்கு!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் மாணவர்களுக்கு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக தான் நடத்தப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு நடத்தப்படும் தெரிவுகள் அனைத்துமே ஆன்லைன் மூலமாக தான் நடைபெற்றது.
நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் நேரடி வகுப்பினை தொடங்கியுள்ளது.அதனால் பள்ளிகளில் நடப்பன்ட்ரிக்கான காலாண்டு தேர்வு முன்னதாகவே நடந்து முடிந்தது.
அந்த காலாண்டு தெரிவுக்கான வினாத்தாள்கள் அந்தந்த பள்ளிகளே தயாரிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது.அதுபோலவே வினாத்தாள்கள் தயாரித்து தேர்வுகள் நடத்தப்பட்டது.இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் தமிழகத்தில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு டிசம்பர் 15 ஆம் தேதி முதல் அரையாண்டுத் தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வானது தமிழகம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் தான் தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு முதல் உள்ள மாணவர்களுக்கு டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதி முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 6,8,10,12 ஆகிய வகுப்புகளுக்கு இந்த தேர்வானது காலை நேரத்தில் நடைபெறும்.அதனையடுத்து 7,9,11 ஆம் வகுப்புகளுக்கு பிற்பகலில் தேர்வுகள் நடைபெறும் அதற்கு ஏற்றவாறு தேர்வு அட்டவணை வரையறுக்கப்பட்டுள்ளது.2023 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.