நாளை முதல் அமலுக்கு வரும் டிஜிட்டல் கரன்சி! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா?
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டில் ரூபாய் நோட்டிற்கு இணையாக டிஜிட்டல் ரூபாய் ரிசர்வ் வங்கி வெளியிடும் என 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கூறியிருந்தார்.
இந்த காலகட்டத்தில் பேப்பர் வடிவில் பணம் இருந்தாலும் நாணய வடிவில் பணம் இருந்தாலும் அதற்கென தனி மதிப்பு உள்ளது.டிஜிட்டல் கோட் மூலம் உருவாக்குவதற்கு டிஜிட்டல் நாணயம் அல்லது டிஜிட்டல் கரன்சி என கூறப்படுகிறது.
இந்த டிஜிட்டல் நாணயத்தை அரசு மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் தயாரித்து வருகின்றனர்.மேலும் இந்தியாவில் இந்த டிஜிட்டல் கரன்சி நவம்பர் 2 ஆம் தேதி அமலுக்கு வந்தது.மேலும் அரசின் நிதிப் பத்திரங்களை மொத்தமாகக் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளில் எண்ம ரூபாயின் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் நிதிப் பத்திரங்களை மொத்தமாகக் கொள்முதல் செய்யும் எஸ்பிஐ,யெஸ் வங்கி உள்ளிட்ட ஒன்பது வங்கிகளுக்கு சோதனை அடிப்படையில் எண்ம ரூபாய் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில்லறை வர்த்தக வாடிக்கையாளர்களுக்கான எண்ம ரூபாய் சோதனை பயன்பாட்டை நாளை தொடங்கப்படும் என ஆர்பிஐ அறிவித்துள்ளது.மேலும் இந்த எண்ம ரூபாய் முதல் கட்டமாக மும்பை, டெல்லி, பெங்களூர், புவனேசுவரம் ஆகிய நான்கு நகரங்களில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.