மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! அரிசி ஏற்றுமதி தடை நீக்கம்!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! அரிசி ஏற்றுமதி தடை நீக்கம்!

இந்தியாவில் இருந்து உடைத்த அரசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதித்த தடை கடந்த  செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி அமலுக்கு வந்தது.உலக அளவில் சீனாவுக்கு அடுத்ததாக அரசி ஏற்றுமதியில் இந்தியா 2 வது இடத்தில் உள்ளது.

ஆனால் நடப்பாண்டில் இந்தியாவில் நெல் சாகுபடி பரப்பளவு 6 சதவீதம் குறைந்துள்ளது.அதனால் மத்திய அரசு நெல் ,அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையினால் பல்வேறு பகுதிகள் பாதிப்படைந்தது.

அதனால் தற்போது முன்னதாக மத்திய அரசு உள்நாட்டு சில்லறை, சந்தையில் பாஸ்மதி அல்லாத ஆர்கானிக் அரிசிகளின் விலை உயர்ந்ததால் உள்நாட்டு புழக்கத்தை அதிகரிக்க அந்த அரிசிகளின் ஏற்றுமதிக்கு  கடந்த செப்டம்பர் மாதம் தடை விதித்ததை பற்றி பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தினார்கள்

அதன் பிறகு தற்போது பாஸ்மதி அல்லாத ஆர்கானிக் அரிசிகள், குருணை அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு நேற்று நீக்கியது.மேலும் இந்த முடிவானது அரிசிகளின் விலை குறைந்த காரணமாகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

Leave a Comment