66 ரூபாயில் முதல்வர் குடும்பத்தை நடத்துவாரா? சத்துணவு ஊழியர்கள் காட்டமான கேள்வி..!

0
198

குறைந்தபட்ச ஓவியம், காலிபணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கம் நேற்று போராட்டத்தில் ஈடுப்பட்டது.

சென்னை, சைதாப்பேட்டையில் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம், சமையல் எரிவாயு தொகையை ரூபாய் 460 உயர்த்தி வழங்குதல் , பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை சத்துணவுதிட்டத்தில் இணைத்தல் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த போராட்டத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தெரிவிக்கையில், உணவுக்கு தேவையான பொருட்களை முன்கூட்டியே வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஒருவர் தெரிவிக்கும் போது, சமையல் எரிவாயு,உணவுப்பொருட்கள் எல்லாம் வீட்டு உபயோகத்திற்கு நிர்ணயிக்கப்படும் அளவுகோலில் தரப்படுகிறது.எங்களுகான மானியமும் வருவதில்லை எங்களால் எப்படி இதனை சமாளிக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதனை தொடர்ந்து அவர் கூறும்போது, 2000 ரூபாய் பணத்தை வைத்து எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும். மாதம் 2000 ரூபாய் எனில் நாள் ஒன்றுக்கு 66 ரூபாய் தான் வருகிறது. ஒரு நாளைக்கு 66 ரூபாயை வைத்து அமைச்சரோ அல்லது முதலமைச்சரோ தங்களது குடும்பத்தை நடத்துவாற்களா? என காட்டமாக கேள்வி எழுப்பினார். மேலும், ஆளும் அரசு தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

Previous articleஐகோர்ட்: ஆட்டோ மீட்டர்களில் ஆட்டோமேட்டிக் கட்டணம் மாறும் முறை.. தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை?
Next articleமின் – ஆதார் இணைப்புக்கு சீமான் கடும் கண்டனம்.. தகவல்கள் திருடப்படும் அபாயம்..!