திமுக பிரமுகரிடம் இருந்து உயிரை காப்பாற்றுங்கள்.. ஆட்சியரிடம் புகார் அளித்த விவசாயி..!

0
221

திமுக பிரமுகர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக விவசாயி புகார் அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளையும் புகார்களையும் அதிகாரிகளிடம் தெரிவிப்பர். அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளுவர்.

இந்நிலையில், இந்த குறைதீர் கூட்டத்திற்கு வந்த விவசாயி கிருஷ்ணன் என்பவர் திமுக பிரமுகர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில், எங்கள் பகுதியில் உள்ள மலடட்டாறு மற்றும் மலை பகுதிகளில் திமுக பிரமுகர் ராஜமார்த்தாண்டம் மணல் கொள்ளையில் ஈடுப்படுகிறார்.

இதனால், விவாயம் பாதிக்கப்ப்டுவதாக தெரிவித்தார். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அவர் கார் ஏற்றி எனை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.இதுகுறித்து எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும், தான் தன்னுடைய தாயுடன் தனியே வசித்து வருவதாகவும் தனக்கும் தனது தாயின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் எங்களை காப்பாற்ற வேண்டும் என அவர் ஆட்சியரிடம் மண்டியிட்டு கோரிக்கை விடுத்தார். இதனை கேட்ட் ஆட்சியர் சென்ற முறையும் இதே புகாரை அளித்துள்ளீர்கள் இந்த விஷயத்தில் உரியநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆளுங்கட்சி பிரமுகர்களே அவர்களின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்தாக இருப்பது மிகவும் வருந்ததக்க விஷயமாக உள்ளது.இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Previous articleமீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! பயண வாய்ப்புகள் கைகூடும் நாள் !
Next articleமதுரை கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு! இந்த இடங்களுக்கு செல்லும்  ரயில்களின் நேரம் மாற்றம்! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here