40 தொகுதிகளிலும் நாம் தான் அடுத்த கூட்டணி யாருடன்.. நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் போட்ட திட்டம் அம்பலம்!!
திமுகவில் மாவட்ட செயலாளர்கள் பலர் புதிய நிர்வாகிகளாக பணி நியமனம் செய்யப்பட்டனர்.அதன் பிறகு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒரு முறை கூட நடத்தப்படவில்லை.இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் அவர் பேசிய முக்கிய தகவல்கள் தற்பொழுது வெளிவந்துள்ளது. அந்த கூட்டத்தில், பிடிஐ வளாகம் இனிவரும் நாட்களில் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி எனக் கூறியுள்ளனர்.
பின்பு பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா டிசம்பர் 15ஆம் தேதி வரவுள்ளது. அதனை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பொதுக்கூட்டம் 100 இடங்களில் நடைபெறும் என்று தீர்மானத்தை நிறைவேற்றினர்.நாடாளுமன்ற தேர்தலுக்கு ஓராண்டுகள் இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தற்போது இருந்தே அதற்கான பணிகளை செய்து வருகிறது.
அந்த வகையில் இன்று முதல்வர் ஸ்டாலின் இந்த கூட்டத்தில் கலந்து தேர்தல் குறித்து முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களில் 39 இடங்களை வென்றது. ஆனால் இம்முறை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதற்கான செயல்பாடுகள் தற்போது இருந்தேன் தொடங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார் என தெரிவிக்கின்றனர்.
அதேபோல தேர்தல்கள் நெருங்கி வரும் போது பூத் கமிட்டி நிறுவுவதில் மாவட்ட செயலாளர்கள் கவனிப்புடன் செயல்பட வேண்டும். குறிப்பாக, நன்றாக பணியாற்றும் நபர்களை மட்டுமே பூத் கமிட்டி நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்க வேண்டும். அதேபோல நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்ளலாம் என்பதை ஓர் ஆண்டுகள் முடியும் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
அதை என்னிடம் விட்டு விடுங்கள், மாவட்ட செயலாளர்கள் ஆன நீங்கள், அரசு வழங்கும் நலத்திட்டங்கள் மக்களுக்கு சரியாக சென்றடைகிறதா என்பதை அவ்வபோது கண்காணிக்க வேண்டும் என்று கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது.