சர்வதேச சராசரி விலை நிலவரம்! இந்த எரிபொருளின் விலை 2.3 சதவீதம் குறைப்பு!
சர்வதேச அளவில் எரிபொருளின் விலை குறைந்து வருகின்றது.அதனை தொடர்ந்து தற்போது விமான எரிபொருள் விளையும் குறைந்துள்ளது.சர்வதேச சராசரி நிலவரி படி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு விமான எரிபொருள் விலையானது மாதந்தோறும் 1 ஆம் தேதி மாற்றியமைக்கப்படும்.
சர்வதேச அளவில் விமான எரிபொருள் விலை குறைந்து வருவதையடுத்து இந்தியாவில் அதனுடைய விலை கிலோ லிட்டருக்கு ரூ 2,775 குறைக்கப்பட்டுள்ளது.மேலும் டெல்லியில் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருளின் விலை ரூ 1,17,587 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.விமானங்களை இயக்கம் நிறுவனங்களின் செலவில் சுமார் 40 சதவீதம் எரிபொருள் கட்டணமாகவே உள்ளது.
தற்போது எரிபொருளின் விலை குறைந்துள்ளதால் விமான நிறுவனங்கள் அதிகளவில் பயனடையும்.மேலும் விமான எரிபொருள் விலை கடந்த மாதம் கிலோ லிட்டருக்கு ரூ 4,842 என குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.மேலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றமில்லாமல் நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும் பெட்ரோல் மற்றும்தடீசல் விலையிலும் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை,கடந்த 8 மாதங்களாக ஒரே விலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.