ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் போதும் பயண டிக்கெட் வாட்ஸ் அப் எண்ணிற்கு வந்து சேரும்? மெட்ரோ ரயில் நிர்வாகம்!
தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அவற்றை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இதில் தினந்தோறும் 1.80 லட்சம் முதல் 2 லட்சம் பேர் பயணம் செய்கின்றார்கள். மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்காக பயண அட்டை முறை ,க்யூ ஆர் குறியீடு முறை போன்றவைகள் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் பயணிகளுக்கு கூடுதலாக வசதி அளிக்கும் வகையில் மெட்ரோ நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் பயணிகள் வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் எடுத்து பயணம் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி கூறுகையில் வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுத்து பயணிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொதுவான வாட்ஸ் அப் எண் வழங்கப்படும்.
அந்த எண்ணிற்கு ஹாய் என்று குறுஞ்செய்தி அனுப்பினால் சார்ட் போட் என்ற தகவல் வரும்.அதில் டிக்கெட் தொடர்பான ஒரு தகவல் இருக்கும்.அதில் பயணம் செய்பவர்களின் பெயர், புறப்படும் மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயர் ,செல்லும் ரயில் நிலையத்தின் பெயர் போன்றவைகளை பதிவு செய்து ,வாட்ஸ் அப் மூலமாகவோ ,ஜிபே மற்றும் யு-பே மூலமாகவோ பணம் செலுத்தினால் வாட்ஸ் அப் எண்ணுக்கு டிக்கெட் வந்து சேரும் எனவும் தெரிவித்துள்ளனர்.