மின் இணைப்பு உள்ளவர்கள் கட்டாயம் இந்த கருவியை பொருத்த வேண்டும் – மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு 

0
129
Electricity
Electricity

மின் இணைப்பு உள்ளவர்கள் கட்டாயம் இந்த கருவியை பொருத்த வேண்டும் – மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

மின் இணைப்பு உள்ளவர்கள் ஆர்சிடி கருவியை பொருத்துவது கட்டாயம் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மழைக் காலங்களில் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் மின் கசிவு காரணமாக அடிக்கடி மின் விபத்துகள் ஏற்படுகிறது. இவ்வாறு நிகழும் இந்த விபத்துகளால் அவ்வப்போது மனித உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இதை தடுக்க மின் இணைப்பு உள்ள அனைத்து வீடுகளிலும் ஆர்டிசி (Residual Current Device) என்ற கருவியை பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஒங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Residual Current Device
Residual Current Device

இதன்படி மின் கசிவால் ஏற்படும் இறப்புகளை தடுக்க முடியும் என்றும், குறிப்பாக மின் இணைப்புகளுடன் இந்த கருவியை பொருத்துவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் வீடு, கடை, தொழில், பண்ணை வீடு, கல்வி நிறுவனங்கள் என அனைத்து வகை மின் நுகர்வோரும் இந்த கருவியை கட்டாயம் பொருத்த வேண்டும் என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleநம்பர் பிளேட்டில் இவ்வாறு இருந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! 
Next articleமாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி