தடை செய்யப்பட்ட போதை மாத்திரை விற்பனை! கடை உரிமையாளர் உட்பட இரண்டு பேர் கைது

0
170
Arrest
Arrest

தடை செய்யப்பட்ட போதை மாத்திரை விற்பனை! கடை உரிமையாளர் உட்பட இரண்டு பேர் கைது

போரூர் அருகே தடை செய்யப்பட்ட போதை மாத்திரை விற்பனை செய்த மருந்து கடை உரிமையாளர் உட்பட இரண்டு பேர் கைது

சென்னை போரூர் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போரூர் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போரூர் குன்றத்தூர் சாலை விக்னேஸ்வரா நகர் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக வந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர்களிடம் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்த போது சூளைமேட்டைச் சேர்ந்த மருந்து கடை உரிமையாளர் அஜய் (23) மற்றும் திருவாண்மியூரை சேர்ந்த அவருடைய நண்பர் தீபன் (29) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் கெருகம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு மருந்து விற்பனை கடைக்கு போதை மாத்திரைகள் சப்ளை செய்வது தெரியவந்தது.

இவர்கள் ஆன்லைனில் ஆன்லைன் மூலமாக மும்பையில் இருந்து மாத்திரைகளை பெற்று பல்வேறு பகுதிகளில் உள்ள மருந்து கடைகளுக்கு சப்ளை செய்து போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ஆயிரம் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள், ஒரு ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர் . மேலும் இது குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Previous articleஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை? இளைஞர்களுக்கு டிஜிபி யின் அறிவுரை!!
Next articleமாணவனை சிறுநீர் கழிக்க அனுமதிக்காமல் 3 மணி நேரம் நிறுத்தி வைத்து ஆசிரியர் செய்த கொடூரம்