மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! 

0
159
good-news-for-disabled-people-announcement-made-by-the-chief-minister
good-news-for-disabled-people-announcement-made-by-the-chief-minister

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

திமுக கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.பெண்களுக்கு கட்டணம் இல்லாத பயணசீட்டு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றது.அந்த வகையில் இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப்படுகிறது.

அதன் காரணமாக சென்னையிலும் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது.இந்த விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்றார்.மேலும் அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதில் 6 மாவட்டங்களுக்கு நடமாடும் மறுவாழ்வு சிகிச்சை வாகனங்கள் ,நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்,வேலை வாய்ப்புடன் மென்பொருள் திறன் பயிற்சியையும் வழங்கினார்.

மேலும் அவர் கூறுகையில் மாற்றுத்திறனாளிகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும்.அவர்களின் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.மெரினாவில் அமைத்துள்ள பாதைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில்  அமைந்துள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது ஓய்வூதியம் ரூ 1000 ஆக வழங்கப்பட்டு வருகின்றது.அவை ரூ 1500 ஆக உயர்த்தப்படும். இந்த கூடுதல் ஓய்வூதியம் வரும் 2023 ஆம் ஆண்டும் ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து வழங்கப்படும்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே பணிபுரிய உதவும் வகையில் தான் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.அதனை பயன்படுத்தி அனைவரும் பயன்பெற வேண்டும் என கூறினார்.

Previous articleஜல்ஜீவன் திட்டத்திற்கு ₹1000 கொடுத்தால் தான் வீட்டிற்கு தண்ணீர் இணைப்பு! ஊராட்சி நிர்வாகிகளின் வசூல் வேட்டை அம்பலம்!
Next articleஉயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பண மோசடி