ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்! இனி இவை கட்டாயம் இல்லை!
காஞ்சிபுரம் மாநராட்சிக்கு உட்பட்ட 48 வது வார்டான கணேஷ் நகர் பகுதியில் 15 லட்சம் ரூபாய் செலவில் சிசிடிவி கேமரா, மாற்றுத்திறனாளிகள் செல்லும் மேடைகள், பயனாளிகள் அமரும் வகையில் இருக்கை, முன் மாதிரியான நியாய விலைக் கடை போன்றவைகளை தமிழக கூட்டுறவுத் துறை ,உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் 2.23 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கின்றனர்.அதில் 14.86 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமே வங்கி எண் ஆதார் எண் இணைக்காமல் இருக்கின்றனர்.மீதமுள்ளவர்கள் ரேஷன்கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி நடைபெறுகிறது.
குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் எண்ணுடன் ஆதார் எண்ணுடன் இணைப்பது என்பது கட்டாயம் இல்லை. ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருக்கும் பொழுது முறைகேடாக யாரேனும் பொருள் வாங்கினால் நம்முடைய மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி வரும் அதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.