கன்னியாகுமரி எஸ் ஐ கொலை வழக்கு! துப்பாக்கி சப்ளை செய்தவர் பெங்களூருவில் கைது!

Photo of author

By Parthipan K

கன்னியாகுமரி எஸ் ஐ கொலை வழக்கு! துப்பாக்கி சப்ளை செய்தவர் பெங்களூருவில் கைது!

Parthipan K

Updated on:

கன்னியாகுமரி எஸ் ஐ கொலை வழக்கு! துப்பாக்கி சப்ளை செய்தவர் பெங்களூருவில் கைது!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பீதியைக் கிளப்பிய எஸ்.ஐ. யின் கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்ததாக சந்தேகப்படும் நபரைப் போலிஸாரைக் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் பணியில் இருந்த எஸ்  ஐ வில்சன் என்பவர் கடந்த வாரம் இரு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து அந்த இருவரும் அங்கிருந்த தப்பி தலைமறைவாகினர்.  குற்றவாளிகளை தமிழக மற்றும் கேரள போலிஸார் தேடி வருகின்றனர்.

கொலை குற்றவாளிகளென சந்தேகிக்கப்படும் இருவரான அப்துல் சமீம், தவ்ஃபீக் ஆகிய இரண்டு பேரின் புகைப்படத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர். இருவரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் இது திட்டமிட்ட கொலைதான் என கேரளப் போலீஸார் அறிவித்துள்ளனர். கொலையாளிகளை பிடிக்க உதவுபவர்களுக்கு 7 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் அதற்கான அலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து கொலையாளிகள் பயன்படுத்திய துப்பாக்கி எப்படி அவர்களிடம் வந்தது என்ற விசாரணையில் மும்பையைச் சேர்ந்த இஜாஸ் பாஷா என்பவரை போலிஸார் சந்தேகித்து அவரைக் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் ஆம்னி பேருந்து ஓட்டுனராக பணிபுரியும் இஜாஸ் பாஷா மும்பையில் இருந்து நான்கு துப்பாக்கிகளை கொண்டு வந்துள்ளனர். அதில் மூன்று துப்பாக்கிகள்  ஏற்கெனவே பெங்களூருவில் கைதான ஐ எஸ் தீவிரவாதிகளிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நான்காவது துப்பாக்கிதான் எஸ்.ஐ வில்சன் கொலையில் பயன்படுத்த பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகித்துள்ளனர்.

இதையடுத்து க்யூ பிரிவு போலீஸார் இஜாஸ் பாஷாவை பெங்களூவில் கைது செய்து சென்னை அழைத்து வந்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையொல் அடைத்துள்ளனர்.