ஈரான்-அமெரிக்கா பதற்ற நிலைக்கு அமெரிக்காவின் நடவடிக்கை தான் காரணம் என கனடா பிரதமர் குற்றசாட்டு

0
170

ஈரான்-அமெரிக்கா பதற்ற நிலைக்கு அமெரிக்காவின் நடவடிக்கை தான் காரணம் என கனடா பிரதமர் குற்றசாட்டு

தற்போது ஈரான் அமெரிக்கா என இரு நாடுகளுக்கிடையே தொடர்ந்து நிலவி வரும் இந்த போர்ப் பதற்றம் அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற உலக நாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. இவ்வாறு இந்த இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் மோதல் போக்கால், சில நாட்களுக்கு முன்பு ஈரானில் பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டு, அதில் பயணித்த பயணிகள் அனைவரும் சம்பந்தமே இல்லாமல் இறக்க நேரிட்டது.

இதனைக்கண்ட உலக நாடுகள் அனைத்தும் கடுமையான விமர்சனங்களை வைத்தன. இந்நிலையில் இந்த சம்பவத்தால் உச்சகட்ட கோபத்தில் உள்ள கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூட், “ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தான் தற்போது நிலவும் இந்த நிலைக்குக் காரணமாகும்,” என பகிரங்கமாக அந்த நாடுகளை குற்றம் சாட்டியுள்ளார். 

முன்னதாக சமீபத்தில் ஈரான் நாட்டு ராணுவத் தளபதியான காசெம் சுலைமானியை யாருமே எதிர்பார்க்காத நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் கட்டளையின் பேரில் அந்நாட்டு ராணுவம் கொன்றது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தான் ஈரான், ஈராக்கிலிருந்த அமெரிக்க ராணுவத முகாம்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த சம்பவம் நடந்த அதே நாளில் தான், ஈரானிலிருந்து உக்ரைனுக்கு சென்று கொண்டிருந்த உக்ரைனின் பயணிகள் விமானமும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்திருந்த 176 பேரும் மரணமடைந்தார்கள். இறந்தவர்களில் 57 பயணிகள் கனட நாட்டுக் குடிமக்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக நாடுகள் அனைத்தையும் சோகத்தில் ஆழ்த்திய இந்த துயர சம்பவத்தில் ஈரானின் பங்கு இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து இந்த விபத்திற்கு ஈரான் தான் காரணமாக இருக்கக் கூடும் என்று அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார்.மேலும் அவர் மட்டுமல்லாமல், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடும், “உக்ரை விமான விபத்துக்கு ஈரான் காரணமாக இருக்கலாமோ என்று சந்தேகம் உள்ளது,” எனறார்.

இதைத் தொடர்ந்து, யாரும் எதிர்பாராத வகையில் உக்ரைன் விமானத்தைத் தவறுதலாக சுட்டு வீழ்த்திவிட்டதாக ஈரான் தரப்பு விளக்கமளித்தது. இதனால் இந்த பிரச்சனை மேலும் பூதாகரமாகியுள்ளது. இந்நிலையில் சம்பவம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூப், “இரு நாட்டுக்கும் இடையில் பதற்றநிலை இருக்கவில்லை என்றால், இன்று விபத்தில் இறந்த அந்த கனட குடிமக்கள் அவர்களது குடும்பங்களோடு வீட்டில் இருந்திருப்பர். 

அணு ஆயுதங்கள் இல்லாத நாடாக ஈரான் இருக்க வேண்டும் என்பதில் சர்வதேச நாடுகள் அனைத்தும் தெளிவாக இருக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் அங்கிருக்கும் தற்போதைய பதற்ற நிலைக்கு அமெரிக்காவின் நடவடிக்கைகளும் முக்கிய காரணமாகத் தான் இருக்கின்றன என்று அமெரிக்காவை விமர்சித்து வெளிப்படையாக பேசியுள்ளார். 

Previous articleதமிழர்களின் பண்பட்ட நாகரிகத்தின் வெளிப்பாடே போகிப்பண்டிகை..!!
Next articleதமிழகத்தின் நலனுக்காக பொன்.ராதாகிருஷ்ணன் செய்தது என்ன..? அமைச்சர் கேள்வி!