ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! அலைச்சல் உண்டாகும் நாள்!

0
168
Taurus – Today's Horoscope!! A day to act in peace!
Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! அலைச்சல் உண்டாகும் நாள்!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் அயன சயன ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் செலவும் மாலையில் சந்திர பகவான் ஜென்ம ராசிக்கு வருவதால் அலைச்சல் உண்டாகும் நாள். நிதி கவலை கொள்ள தேவையில்லை.

கணவன் மனைவி ஒற்றுமையுடன் காணப்படுவீர். உத்தியோகத்தில் பிரச்சனைகள் வருவதால் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது அவசியம். தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனம் வேண்டும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு வீண் மன குழப்பம் வந்து சேரலாம். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களை எடுக்கும் முயற்சிகள் சற்று இழுபறி ஆகிறதே என்ற கவலையுடன் செயல்படுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதரர்களின் மூலம் சில பிரச்சனை வரலாம். அரசியல்வாதிகளுக்கு அலைச்சல்கள் உண்டாகும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து
குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.

Previous articleமேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! காலையில் அலைச்சலும் மாலையில் ஆதாயமும் கிடைக்கும் நாள்!
Next articleமிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! செலவும் உண்டாகும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here