மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! செலவும் உண்டாகும் நாள்!

0
152
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! செலவும் உண்டாகும் நாள்!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் லாப ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் வரவும், மாலையில் அயன சயன தானம் ஆகிய விரய ஸ்தானத்திற்கு செல்வதால் செலவும் உண்டாகும் நாள்.

நிதி அனுகூலமாக உள்ளது. கணவன் மனைவியிடையே கருத்து ஒற்றுமை மேலோங்கும். குடும்ப உறுப்பினர்கள் பக்கபலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். கொடுக்கல் வாங்கல் அருமையான பாதையில் இருக்கும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு தின வரவு ஒன்று வந்து சேரலாம். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் மனதில் மகிழ்ச்சி காண்பார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில நன்மைகள் எதிர்பார்க்கலாம். அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதில் இருந்து வந்த காலதாமதங்கள் விலகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.