பிரபல நடிகை வித்யா பாலன் இந்த வயதிலும் அழகாக இருப்பதன் சீக்ரெட் என்ன தெரியுமா?

சிறந்த சருமத்தோடு இருப்பதற்கும், இளமையாக இருப்பதற்கும் நல்ல நிம்மதியான உறக்கம் மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது தான் முக்கியமான காரணம் என்று நடிகை வித்யாபாலன் நம்புகிறார்.

இந்திய நடிகைகளில் உண்மையான அழகிக்கு எடுத்துக்காட்டு என்றால் அது நமது வித்யா பாலன் தான், மும்பையில் பிறந்த இவருக்கு தற்போது வயது 43 ஆகிறது ஆனால் இவரை பார்த்தால் உண்மையான வயதைவிட கிட்டத்தட்ட 10 வயது குறைவாக காட்சியளிக்கிறார்.

இந்த வயதிலும் இவர் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறார் என்கிற சந்தேகம் 40 வயதை நெருங்கும் பெண்கள் மட்டுமல்லாது எல்லா வயது பெண்களுக்கும் கண்டிப்பாக இருக்கக்கூடிய ஒன்று தான். இப்போது வித்யா பாலனின் இளமையான தோற்றத்திற்கும், பளபளப்பான சருமத்திற்கும் பின்னால் மறைந்திருக்கும் சீக்ரெட் பற்றி இந்த பகுதியில் உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம். அதனை தெரிந்துகொண்டு நீங்களும் உங்கள் வயதை மறைத்து இளமையாக காட்சியளியுங்கள்.பிரபல நடிகை வித்யா பாலன் இந்த வயதிலும் அழகாக இருப்பதன் சீக்ரெட் என்ன தெரியுமா?

சருமத்திற்கு மாய்ஸ்ச்சரைசிங் செய்வது எவ்வளவு முக்கியம் என்பது இன்றைய காலத்து இளம்பெண்களுக்கு நன்றாக தெரியும். அதைத்தான் வித்யாபாலன் தவறாமல் செய்கிறாராம். எப்பொழுதும் அவரது ஹேண்ட்பேக்கில் மாய்ஸ்ச்சரைசரும், கைக்கு க்ரீமும் வைத்திருப்பாராம். இந்த இரண்டையும் ஒருநாள் கூட அவர் பயன்படுத்த மறப்பதில்லை.

கெமிக்கல் நிறைந்த சோப்புகளை தவிர்த்துவிட்டு இயற்கையான மூலங்கள் நிறைந்த சோப்புகளை தான் குளியலுக்கு பயன்படுத்துகிறார். மல்லிகை ஃபிளேவர் சோப்பு தான் இவரின் ஃபேவரைட். மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தனது சருமத்திற்கு க்ளீன் அப் செயல்முறையை தவறாமல் செய்கிறார்.பிரபல நடிகை வித்யா பாலன் இந்த வயதிலும் அழகாக இருப்பதன் சீக்ரெட் என்ன தெரியுமா?

மேலும் தான் சிறந்த சருமத்தோடு இருப்பதற்கும், இளமையாக இருப்பதற்கும் நல்ல நிம்மதியான உறக்கம் மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது தான் முக்கியமான காரணம் என்று நடிகை வித்யாபாலன் நம்புகிறார். சருமத்தில் பருக்கள் வரும்பொழுது அவர் எவ்வித கெமிக்கல் நிறைந்த க்ரீம்களை பயன்படுத்தாமல் சோற்றுக்கற்றாழையை மற்றும் அப்ளை செய்வாராம்.

தலைமுடி பராமரிப்பை பொறுத்தவரை அவர் வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை தலைக்கு எண்ணெய் வைத்துவிடுவாராம் மற்றும் அவர் ஆயுர்வேத பொருட்களுக்கு மட்டுமே அதிக முன்னுரிமை கொடுக்கிறார்.

Leave a Comment