12 ஆம் வகுப்பு முடித்த மாணவிகளின் கவனத்திற்கு! 5 நாட்களில் இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்!
சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டையில் இருக்கும் தொற்றுநோய் மருத்துவமனையில் 2022 -2023 ஆம் ஆண்டுக்கான மருத்துவ இணையியல் படிப்பான இரண்டு ஆண்டுகள் உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சியில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் பணியாளர்களின் பெண் குழந்தைகள் ,சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.இந்த பயிற்சி படிப்பிற்கு விண்ணப்பிக்க 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
மேலும் இதில் ஒற்றைச் சாளர முறையில் சமூக வாரியாக சுழற்சி முறையில் மாணவிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் இந்த படிப்பிற்கு ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்கள் இயக்குநர்(பொ),தொற்றுநோய் மருத்துவமனை ,எண்187 ,திருவொற்றியூர் நெடுஞ்சாலை ,தண்டையார்பேட்டை ,சென்னை -600081 என்ற முகவரியில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்த விண்ணப்பங்களை இன்று முதல் டிசம்பர் 11 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவமனையின் வேலை நாட்களில் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பத்தை டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் மருத்துவமனையின் அலுவலத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.