தியேட்டரில் குழந்தைகள் அழுதால் இனி கவலைவேண்டாம்…அரசின் அட்டகாசமான திட்டம் !

0
157

கேரள அரசின் அதன் கீழ் இயங்கும் திரையரங்குகளில் அழுகை அறை என்கிற ஒரு அறை அமைக்கப்பட்டு வருகிறது, இந்த அறை முழுவதும் கண்ணாடியால் வடிவமைக்கப்படுகிறது.

தியேட்டரில் சென்று படம் பார்ப்பது என்றால் யாருக்கு தான் பிடிக்காது, நண்பர்களுடன் சேர்ந்து போய் படம் பார்ப்பது, காதலருடன் சேர்ந்து போய் படம் பார்ப்பது மற்றும் குடும்பத்துடன் சென்று படம் பார்ப்பது என நமக்கு பிடித்தவர்களுடன் சென்று படம் பார்ப்போம். ஆனால் கைக்குழந்தையுடன் இருக்கும் தம்பதிகள் பெரும்பாலும் குழந்தையுடன் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதில் ஆர்வம் கட்டமாட்டார்களால் ஏனென்றால் குழந்தைகள் தியேட்டரின் சத்தத்தில் அழுகத்தொடங்கிவிடும். குழந்தைகள் அழுதாள் அதனை சமாதானப்படுத்தி அழுகையை நிறுவது அவ்வளவு சுலபமானது அல்ல அது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய டாஸ்க் மற்றும் இது மற்றவர்களுக்கும் சற்று இடையூறை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே கைக்குழந்தையுடன் இருக்கும் தம்பதில் ஆசை இருந்தாலும் தியேட்டருக்கு குழந்தையுடன் செல்லமாட்டார்கள்.Kerala movie theatre gets soundproof 'crying room' for parents with infants  - India Today

ஆனால் இனிமேல் கேரள மக்களுக்கு இதுகுறித்த கவலை இனிமேல் கிடையாது, இதற்காகவே பிரத்யேகமாக கேரள அரசு ஒரு சூப்பரான ஏற்பாட்டை செய்திருக்கிறது. அதாவது கேரள அரசின் அதன் கீழ் இயங்கும் திரையரங்குகளில் அழுகை அறை என்கிற ஒரு அறை அமைக்கப்பட்டு வருகிறது, இந்த அறை முழுவதும் கண்ணாடியால் வடிவமைக்கப்படுகிறது. கைக்குழந்தையை வைத்திருக்கும் தாய்மார்கள் இந்த அறையினுள் அமர்ந்து படத்தை பார்த்து மகிழலாம், அந்த சமயத்தில் குழந்தை அழுதாலும் பிரச்சனை இல்லை ஏனெனில் அந்த கண்ணாடி அறையை தாண்டி குழந்தை அழுகும் சத்தம் மற்றவர்களுக்கு கேட்காது.Kerala movie theater gets soundproof crying room for parents with infants.  Kerala Movie Theatre: The Kerala government adopted this method in cinema  halls for small children; Know what's special

மேலும் அந்த கண்ணாடி அறையினுள் குழந்தைகளுக்காக தொட்டில் மற்றும் டயப்பர்களும் வைக்கப்பட்டு இருக்கும், அதனை தேவைப்படுபவர்கள் உபயோகித்து கொள்ளலாம். தற்போது அரசின் கீழ் இயங்கும் திரையரங்குகளில் அழுகை அறை அமைப்பதற்கான பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், தனியார் வசம் உள்ள திரையரங்குகளிலும் இதேபோன்ற வசதியை மக்களுக்கு செய்துதர கோரி அரசு அறிவுறுத்தியுள்ளது.

Previous articleகனமழை எதிரொலி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை? எந்தந்த மாவட்டங்களுக்கு தெரியுமா! 
Next articleசர்தார் மாஸ் வெற்றி! கார்த்தியின் வியக்க வைக்கும் பரிசு!!