ஆன்லைன் சூதாட்ட நிர்வாகிகளுடன் கைகோர்த்த கவர்னர்! தடை மசோதாவிற்கு காலம் தாழ்த்தும் திட்டம் அம்பலம்!
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல தற்கொலைகள் அடுத்தடுத்து நடந்து வருவதையொட்டி தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுக்கு தடை செய்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சட்ட மசோதா காலவதி ஆகிய நிலையில் தற்போது வரை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வருகிறார். இதனை பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் திமுக போன்ற கட்சிகள் ஆளுநரை மாற்றம் செய்யும்படியும் போராடி வரும் இந்த வேளையில், பாஜக மற்றும் தமிழிசை போன்றோர் ஆன்லைன் சூதாட்டத்திற்கும் ஆளுநரை மாற்றுவதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்ற வகையில் பேட்டி அளித்து வருகின்றனர்.
இவ்வாறு திமுக உட்பட அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து கவர்னர் மீது அதிருப்தி கொண்டிருக்கும் இந்த சூழலில் ஆளுநர் ஆர் என் ரவி ஆன்லைன் சூதாட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டமானது இரு தினங்களுக்கு முன்பு ஐந்தாம் தேதி நடைபெற்ற நிலையில், இதில் ரம்மி விளையாட்டை நடத்தும் கேம் 24×7 உரிமையாளர் விக்ரமன் முதலிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
இவர்களிடம் ஆளுநர் ரம்மி விளையாட்டில் பொதுமக்கள் பணம் இழப்பது குறித்து விசாரணை செய்ததாக தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு தற்பொழுது வரை ஒப்புதல் அளிக்காத நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு இயற்றியுள்ள தடை மசோதா குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறுகின்றனர். அரசியல் சுற்றுவட்டாரங்கல், ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிர்வாகிகள் கவர்னரை ஓர் விதத்தில் கவனத்திருக்கலாம்,அதனால் கூட இவர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வரலாம் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
அவர்கள் குற்றம் சாட்டிற்கு ஏற்ப தான் தற்பொழுது கவர்னர் நடந்து கொண்டிருப்பதால் பலருக்கும் இது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.