கட்டணமில்லா பேருந்து ரத்து.. கட்டணம் உயர்வு? அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் தமிழக அரசு!
திமுக ஆட்சிக்கு வந்த உடன் தமிழகத்தில் பல பொருள்களின் விலையை உயர்த்தியதில் முதலாவதாக பால் விலை உயர்வு மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து மின்கட்டணம் உயர்வு, பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருப்பதும் மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதளவில் புரட்டி போட வைத்துள்ளது.
இவ்வாறு இருக்கும் சூழலில் போக்குவரத்து துறையானது அதீத கடனில் செல்வதால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என்று பேச்சுக்கள் இருந்து வந்தது.இந்த நிலையில் இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், குறிப்பாக அரசு போக்குவரத்துக் கழகம் அதிக கடன் சுமையில் இருப்பதற்கு முக்கிய காரணிகளில் ஒன்று பெட்ரோல் டீசல் விலை உயர்வு.
இவ்வாறு கடனில் இருந்தாலும் முதல்வர் அவர்கள் 420 கோடி செலவில் ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்க ஒப்புதல் அளித்து மக்களின் தேவை தான் முக்கியம் என்பதை நிரூபித்துள்ளார்.அந்த வகையில் தான் எந்த ஒரு சூழ்நிலையிலும் பேருந்து கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று அவரே உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
இதர மாநிலங்கள் பேருந்து கட்டணத்தை உயர்த்தினாலும் தமிழகத்தில் எந்த ஒரு சூழலிலும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது. அத்தோடு ஆயிரம் புதிய பேருந்துகள் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சலுகைகளை அளித்ததோடு ஒரு பக்கம் விலைவாசியும் உயர்த்தியது. விலைவாசியின் உயர்வை பார்த்து திக்கு முக்காடி போன மக்களுக்கு பேருந்து கட்டணமும் உயர்த்தினால் மிகவும் சிரம படக்கூடும்.
அதேபோல பெண்களுக்கு கட்டணம் இல்லாமல் பயணச்சீட்டு என்ற திட்டத்தை அமல்படுத்தியதிலிருந்து போக்குவரத்து கழக கடன் சுமையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. எனவே கூடிய விரைவில் அந்தத் திட்டத்தை ரத்து செய்யக்கூடும் என்று பலர் பேசி வருகின்றனர்.