மறந்து கூட இந்த விரலினால் விபூதியை பூசாதீர்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

0
272

மறந்து கூட இந்த விரலினால் விபூதியை பூசாதீர்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த உடனே பிரசாதமாக நாம் வீட்டிற்கு எடுத்து வரும் பொருட்களில் முதன்மையானது விபூதி தான் அந்த விபூதியை எந்த விரலில் பூசினால் என்ன நடக்கும் என்று இந்தப் பதிவின் மூலம் காணலாம்.

விபூதி என்பது நல்ல அதிர்வுகளை உள்வாங்கும் தன்மையை கொண்டது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் விபூதி பூசி கொள்வதால் அவ்விடங்களின் வலிமை அதிகமாகும் என கூறப்படுகிறது.

இதனால் தான் திருநீறு பூசுவதை வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள்.மனித உடலிலேயே நெற்றி மிக முக்கிய பாகமாகக் கருதப்படுகிறது. நெற்றியில் தான் அதிகமாக வெப்பம் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்கவும் படுகின்றது. சூரியக் கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் அதிர்வுகளை உள்ளனுப்பும் செயலை விபூதி செய்கிறது. அதனால் தான் திருநீறை நெற்றியில் கட்டாயம் வைக்கின்றனர்.

கட்டைவிரல்: கட்டை விரலால் விபூதியை தொட்டு பூசினால் நமக்கு ஏற்பட்டுள்ள தீராத வியாதிகள் ஏற்படும் என்பது முன்னோர்களின் வாக்கு.

ஆள்காட்டி விரல்: ஆள்காட்டி விரலால் விபூதியை தொட்டு பூசினால் நாம் வைத்துள்ள பொருட்கள் நாசமாகும்.

நடுவிரல்: நடுவிரலால் விபூதியை தொட்டு பூசினால் நம் வாழ்க்கையில் எப்பொழுதும் நிம்மதி இன்மை ஏற்படும்.

மோதிர விரல்: மோதிர விரலால் விபூதியை தொட்டு பூசினால் வாழ்க்கையில் எப்பொழுதுமே மகிழ்ச்சி மட்டுமே இருக்கும்.

மோதிர விரல் மற்றும் கட்டைவிரல்:மோதிர விரல் மட்டும் கட்டைவிரலை பயன்படுத்தி விபூதியை பூசினால் உலகம் உங்கள் வசப்பட்டு அனைத்திலும் வெற்றியை மட்டுமே காணலாம்.

 

Previous articleஇந்த பட்டையை மட்டும் தேங்காய் எண்ணையில் கலந்து தடவுங்க! முடி காடு மாதிரி வளரும்
Next articleகடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here