விஜயின் செயலால் அதிர்ந்து போன யோகி பாபு! இவருக்கு  இப்படி ஒரு முகமா.. வைரலாகும் பதிவு!

விஜயின் செயலால் அதிர்ந்து போன யோகி பாபு! இவருக்கு  இப்படி ஒரு முகமா.. வைரலாகும் பதிவு!

தமிழ் திரையுலகில் அஜித் விஜய் என்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில் இவர்களது படம் ஒரே நாளில் வெளிவரும் பொழுது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படமானது வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளிவர உள்ளது.

இதில் முதலாவதாக விஜயின் வாரிசு படத்தின் பாடல் வெளிவந்து பல மில்லியன் கணக்கில் வியூவர்ஸை கடந்து செல்கிறது. அஜித்தின் துணிவு படத்தின் பாடல் நேற்று மாலை வெளியாகி அதுவும் கேட்டகரியில் வந்துள்ளது.

தற்போது விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா சரத்குமார் ஷாம் பிரபு பிரகாஷ்ராஜ் காமெடி நடிகராக யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு டப்பிங் என அனைத்தும் முடிந்து படம் ரிலீஸ் ஆவதை நோக்கி உள்ளது. தற்பொழுது யோகி பாபு பல படங்களில் பிசியாக இருக்கும் பட்சத்தில் அவருக்கான நேரத்தையும் ஒதுக்கி வருகிறார்.

அவ்வபோது கிரிக்கெட்டை ஆர்வமாக விளையாடி வரும் நிலையில் அது குறித்த வீடியோக்களையும் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்பொழுது வாரிசு படம் முடிவடைந்ததை அடுத்து நடிகர் விஜய் சர்ப்ரைஸ் ஆக யோகி பாபுவிற்கு கிரிக்கெட் மட்டையை பரிசாக அளித்துள்ளார். இந்த கிரிக்கெட் மட்டையுடன் யோகி பாபு புகைப்படம் எடுத்து அதனையும்  பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த பேட்டை எனக்கும் சர்ப்ரைஸ் ஆக கொடுத்த விஜய் அண்ணாவுக்கு தேங்க்யூ என்று விஜய்யை டேக்ஸ் செய்து குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment