தாயைக் கொன்ற இளம் நடிகை ; அதிர்ச்சியில் திரையுலகம் !

Photo of author

By Parthipan K

தாயைக் கொன்ற இளம் நடிகை ; அதிர்ச்சியில் திரையுலகம் !

Parthipan K

தாயைக் கொன்ற இளம் நடிகை ; அதிர்ச்சியில் திரையுலகம் !

கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் படங்களில் நடித்த அமெரிக்க நடிகை மோலி பிட்ஸ் தனது தாயாரைக் கொலை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் அமெரிக்கா, தி பஸ்ட் அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை மோலி மேக்ஸீன் பிட்ஸ்ஜெரால்டு . நடிப்பது மட்டுமில்லாமல் படங்கள் தயாரிப்பது மற்றும் இயக்குவது போன்ற பணிகளிலும் அவர் ஈடுபட்டு வந்தார். இவர் தனது தாயோடு வசித்து வந்தார்.

கடந்த மாதம் மோலியின் தாய் பெட்ரிஷியா பிட்ஸ் ஜெரால்டு (68) மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது சடலத்துக்கு அருகில் மோலி படுகாயமடைந்து சுய நினைவின்றி கிடந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்த போலிஸார் மோலிதான் தனது தாயைக் கொலை செய்திருப்பார் என சந்தேகித்தனர்.

ஆனால் மோலியோ தனது தாயார் தன்னைக் கத்தியால் குத்த முனைந்ததாகவும் தான் தற்காப்பிற்காகவுமே அவரை கத்தியால் குத்தியதாகவும் கூறியிருந்தார். ஆனால் போலீஸ் விசரணையில் மோலியின் தாயார் கத்தி எதையும் உபயோகப்படுத்தவில்லை என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து மோலியை அவரது தாய்க் கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்த்துள்ளனர். இந்த சம்பவமானது ஹாலிவுட்டில் மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இதையடுத்து மோலியைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.